நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் - தமிழ்நாடு அரசுக்கு தினகரன் கோரிக்கை

 
ttv dhinakaran

நெல் மூட்டைகள் மழையில் நாசமடைந்துள்ள நிலையில்  விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்  என்று  தினகரன்  வலியறுத்தியுள்ளார்.

paddy procurement

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன.

ஏற்கனவே, வடகிழக்கு பருவமழையினால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமான நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டது.  எனவே, பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாததால் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் தேக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.



ஆகவே, பாதிக்கப்பட்ட இடங்களில் முறையான ஆய்வை உடனடியாக மேற்கொண்டு விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.