5000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைக்க அரசாணை

 
govt

5000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைக்க, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

farmers

சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த மின்சாரத்தை விவசாயிகள் தங்களின் தேவைக்கு போக அரசுக்கு விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது . மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 30 சதவீதம் நிதியும்,  எஞ்சிய 40 நிதி மின்வாரியம் உதவியுடன் வங்கி கடன் பெற்று விவசாயிக்கு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  சிறிய அளவில் அமைக்கப்படும் சூரிய மின் சக்தி நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் பாசனப்பணிக்கு பயன்படுத்தப்படும் , மீதமுள்ள மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் விலைக்கு பெற்றுக் கொள்ளும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

eb

இந்நிலையில் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் 5,000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோதனை அடிப்படையில் மாற்றி அமைப்பதற்கு அரசாணை பிறப்பித்துள்ளது.