டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தேதிகள் அறிவிப்பு... முதல்நிலை தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி...

 
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 3,800 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும்  குரூப் 1 தேர்வுகள் முதல்நிலை,  முதன்மைத் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் என மூன்று நிலைகளில் நடத்தப்படும்.  அதில் குருப்-1 பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி 3-ம் தேதி நடத்தப்பட்டது.   66 பணியிடங்களுக்கான இந்த தேர்வை ஏராளமானோர் எழுதியிருந்தனர்.   

நீட் தேர்வு

இதில்  66 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்விலிருந்து  அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இத்தேர்வுக்கு  தற்காலிகமக தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

அந்ததேர்வர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் டிசம்பர் 22 முதல் ஜனவரி 5 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட தேர்வான முதன்மைத் தேர்வுகள் அடுத்த ஆண்டு( 2022) மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.