மார்ச்சில் குரூப் 4 தேர்வு : 2022 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு...

 
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்! திமுக அரசு அதிரடி

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்டி தேர்வாணையம் சார்பில் எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை.  அதோடு டிஎன்பிஎஸ்சி  நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி தமிழக அரசு  அரசாணை வெளியிட்டிருக்கிறது.  

மன உளைச்சலில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்… விரைந்து கலந்தாய்வு நடத்த ராமதாஸ் கோரிக்கை!

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. 2022-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.  2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2,குரூப் 2 A தேர்வுகள் நடத்தப்படாத நிலையில்,குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வு நடைபெறும் என்றும்  கூறப்பட்டுள்ளது. குரூப் 2 பிரிவில் 5831 காலிப்பணியிடங்களும், குரூப் 4 பிரிவில் 5255  காலிப்பணியிடங்களும் நிரப்பட உள்ளதாக  தெரிவித்துள்ளார். குறிப்பாக,அடுத்த ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி

குரூப் 2க்கான சரிசெய்யப்பட்ட பாடத்திட்டம் ஒன்றிரண்டு வாரங்களில் இணையதளத்தில் வெளியாகும் என்றும், குரூப் 1 முதன்மைத் தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என்றும் , தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓ.எம்ஆர் விடைத்தாளில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட விவரத்தை பார்த்தே பாதி வழியில் விடைத்தாள்களை திருத்தி முறைகேடு நடந்துள்ளது என்பதால், அவற்றை தடுக்க ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தனிப்பட்ட விவரம் இனி தேர்வு முடிந்தபின் தனியாக பிரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.