குரூப் 4 காலிப் பணியிடங்கள் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்- டிஎன்பிஎஸ்சி

 
tnpsc tnpsc

குரூப் 4 காலிப் பணியிடங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஓராண்டுக்கு சராசரியாக 4,466 என்ற கணக்கில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.

tnpsc3

ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி IV, 2024 இல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா? என குறைதீர் அழைப்பு மையம் அடிக்கடி கேள்வி எழுப்புவதாக குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம், “2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நிதியாண்டிற்கு 4466 அதாவது காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன. எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.