டி.என்.பி.எஸ்.சி : குரூப் 2 , 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..!!

 
tnpsc tnpsc

645 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பை  டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.  

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகள் மூலம் நிரப்பிவருகிறது.  அந்தவகையில் அண்மையில் தான் குரூப் 4 தேர்வு நடந்து முடிந்தது.  தொடர்ந்து தற்போது குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வின் மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  சார்பதிவாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 645 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.  

tnpsc
இந்த குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 18ம் தேதி இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எச்.சி அறிவித்திருக்கிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் :  https://tnpsc.gov.in/Document/tamil/GRP2_11_2025_TAMIL.pdf

தேர்வுக்கு விண்ணப்பிக்க : https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ%3D%3D