S.I.R பணிக்கு எதிராக வருவாய்த்துறை ஊழியர்களை தூண்டி விடுவதா? – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

 
1 1

வஉசியின் 89வது நினைவுத் தினத்தை ஒட்டி, திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியால் மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிட முடியாது எனவும் முந்தைய காலத்தில் வலுவான கூட்டணி அமைத்த கட்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளதாகவும் கூறினார்.முன்னதாகப் பாஜக கூட்டணியில் தவெக இணையும் எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்த கருத்து தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர்களது ஆசை நிறைவேறும் எனப் பதில் கூறினார்.