இன்று டிசம்பர் 1 : இன்று முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய சவால்கள்..!!

 
1 1

எல்பிஜி சிலிண்டர் விலை : டிசம்பர் 1ஆம் தேதி, எல்பிஜி. சிலிண்டர் விலைகள் புதுப்பிக்கப்படும். நவம்பர் 1, 2025 அன்று, 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.50 வரை குறைக்கப்பட்ட நிலையில், டிசம்பரில் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பது தெரியவரும்.

விமான எரிபொருள் விலை : எல்பிஜி போலவே, விமான விசையாழி எரிபொருளான ஏ.டி.எஃப் (ATF) விலைகளிலும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் திருத்தம் செய்யப்படும். இந்த விலை திருத்தங்கள் விமானப் போக்குவரத்து செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8வது ஊதியக்குழு :

இந்த மாத தொடக்கத்தில் 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது, பரிந்துரை விதிமுறைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பல எதிர்பார்க்கப்படுகின்றன. ToR -இல் கோரப்பட்ட மாற்றங்களுக்கும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரியுள்ள மாற்றங்ளுக்கும் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பதில்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் :

இந்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் இபிஎஃப் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் அதிகரிப்பு, இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு ஆகியவை பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்படலாம். இந்த மாதம் இந்த கூட்டம் நடந்தால் டிசம்பரிலேயே இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்:

எஸ் பேங்க் கிரெடிட் கார்டு: பயனர்களுக்கு விமானம் மற்றும் ஹோட்டல்கள் தொடர்பான ரிவார்ட் புள்ளிகளில் வரம்பு அமைக்கப்பட உள்ளது.

HDFC பேங்க்: ஒரு காலாண்டுக்கு ரூ.1 லட்சம் வரை செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச ஓய்வறை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

SBI மற்றும் ஆக்ஸிஸ் பேங்க்: எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் இணைந்து தங்கள் ரிவார்ட் பாயிண்ட்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்தியுள்ளன.

மாலத்தீவு கட்டணம்: இந்தியாவிலிருந்து மாலத்தீவை சுற்றி பார்க்க செல்பவர்கள் இந்த மாதம் முதல் அதிக விமானக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் எக்கானமி வகுப்பு பயணிகளுக்கான பிளைட் கட்டணம் ரூ.2,532 ரூபாயிலிருந்து ரூ.4,220 ஆக உயர உள்ளது. அதேபோல பிசினஸ் வகுப்பு பயணிகளின் கட்டணம் 10,129 ரூபாயாக அதிகரித்துள்ளது முன்பு பாதிக்குப் பாதியாக இருந்த விலை இந்த முறை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணிகள் 20,257 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.