₹54,000த்தை தொட்ட தங்கம் விலை!
Jun 6, 2024, 10:30 IST1717650056530
ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்துள்ளது இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹54,400க்கும், கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ₹6,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


