தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!!

 
gold

கொரோனா காரணமாக தொழில்துறையில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. 35 ஆயிரம் ரூபாயை எட்டிய தங்கம் விலையில் பெருமளவு மாற்றம் ஏதுமில்லை.மாற்றங்கள் ஏதுமின்றி ரூ.35 முதல் ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வருகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,528க்கும்,  ஒரு சவரன் ரூ.36,224க்கும் விற்பனையானது.

gold

நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,538க்கு ம் , சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,304க்கு விற்பனையானது. அத்துடன் வெள்ளி விலையும்  கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,200க்கும் விற்பனையாகி வந்தது. 

gold
இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,508 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,536 ரூபாயாக இருந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 28 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து 36,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.70 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.69.20 ஆகக் குறைந்து ஒரு கிலோ வெள்ளி 69,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.