இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சி.. ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை..

 
தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776  உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் விலை  ரூ.39,760க்கு விற்பனையாகிறது.  தங்கம் விலை 40 ஆயிரத்தை நெருங்கியதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்  சற்றும்  தனியாமல்  10 நாட்களாக நீடித்து வருகிறது.  இதனால் பங்குச் சந்தைகள் சரிவுடனேயே தொடங்குகின்றன. ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டாலும், பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்தே காணப்படுகிறது.  இது முதலீட்டாளர்களிடையே பெரும் கலத்தை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக  சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இதனால்  இந்தியாவில் கடந்த வாரங்களில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அப்படியே ஒரு நாள் விலை குறைந்தும்,  அடுத்த நாளே அதைவிட அதிகமாக உயர்வதுமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  

அந்தவகையில்  இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ரூ.39,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.   கிராமுக்கு ரூ.97 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,970க்கு விற்பனையாகிறது.  ஒருன் கிராம்  5 ஆயிரத்தையும், ஒரு சவரன் 40 ஆயிரத்தையும் நெருங்குவது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.  

வெள்ளி விலை

இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.73.40க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சர்வதேச  சந்தைகளில் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 15 டாலரை நெருங்கியுள்ளது ஆகையால் வெள்ள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.