அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்த தங்கம் விலை!!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக குறைந்துள்ளது.

gold

சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. நேற்றைய நிலவரப்படி  ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,480 ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.43,840 ஆகவும் விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 560 குறைந்து, 43,280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ,  ரூ. 5,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 76.50க்கு விற்பனையாகிறது.