சசரவென உயரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்துள்ளது.

gold


சென்னையில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.  தங்கம் விலை ரூபாய் 35 ஆயிரம் என்ற நிலையிலேயே நீடித்து வந்தது.  நேற்று முன்தினம் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,447 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்தது.  கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 4,444  ரூபாய்க்கு தங்கமானது விற்பனை செய்யப்பட்டு வந்தது.  அதன்படி நேற்று ஆபரண தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 522 ஆக இருந்தது.

gold

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.36,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.51 உயர்ந்து ரூ.4,505க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.66.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.