இன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

 
1

ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள்.

Erode

இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ம் தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது. கடந்த 19-ம் தேதி கம்பம் சாட்டுதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற்றது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (மார்ச் 26) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Local-holiday

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தியில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (மார்ச் 26) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறும் என்றும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30-ம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.