இன்று ஆடி அமாவாசை... இன்று குலதெய்வத்தை இப்படி வழிபடுங்க..!

ஆடி அமாவாசை அன்று வீட்டிற்கு பிராமணர்களை அழைத்து, வேத மந்திரங்கள் சொல்லி, 21 தலைமுறையை சேர்ந்த முன்னோர்களுக்கும் திதி கொடுக்கலாம். தாய்வழி 21 தலைமுறையினருக்கும், தந்தை வழி 21 தலைமுறை முன்னோர்களுக்கும் என மொத்தம் 42 பிண்டங்கள் வைத்து, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பு. பகல் 11 மணி முதல் 1 மணிக்குள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, 10 பேருக்காவது அன்னதானம் அளித்து, பித்ருக்கள் வழிபாட்டினை நிறைவு செய்து விட வேண்டும்.
குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாது, வீட்டிலேயே குலதெய்வத்தை வழிபட நினைப்பவர்கள் ஆடி மாதத்தின் அனைத்து நாட்களும் இரவு 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்திற்குரிய அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பு. இந்த வழிபாட்டினை தடை இல்லாமல் 30 நாட்களும் செய்வது சிறப்பு. இது தவிர ஆடி அமாவாசை அன்று வீட்டில் குலதெய்வத்தை வழிபட நினைப்பவர்கள், சுவாமிக்கு பூ போட்டு, பூஜை துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்க முன்பாக வீட்டின் முன் வாசல் கதவை அடைத்து விட்டு, சாம்பிராணி போட்டு, அதன் புகையை வீடு முழுவதும் காட்ட வேண்டும்.
வீட்டில் போடும் சாம்பிராணியில் குங்குல்யம், பால் சாம்பிராணி, பேய் சாம்பிராணி, மருதாணி விதை, கருஞ்சீரகம், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, சாம்பிராணி காட்ட வேண்டும். சாம்பிராணி புகை வீடு முழுவதும் பரவியதும், அதற்கு பிறகு வீட்டின் முன் வாசல் கதவை திறந்து விட்டால் வீட்டில் உள்ள அனைத்து தீய சக்திகள், நோயை ஏற்படுத்தும் சக்திகள் என அனைத்தும் வீட்டில் இருந்த வெளியேறி விடும். அதற்கு பிறகு வீட்டில் குலதெய்வத்திற்கு பூஜை போட்டு, வழிபடுவது சிறப்பு.