"இன்று ஓய்வு நாள் அல்ல... மிக முக்கியமான நாள்" - குடும்பத்துடன் வாக்களித்த சிவகார்த்திகேயன் பேட்டி..!

 
1

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன்,
“நீங்கள் அரசியலில் தலையிடவில்லை என்றால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும் என்று புரட்சியாளர் லெனின் கூறியுள்ளார். அப்படியானால், நாம் அரசியலில் தலையிடுவதற்கான மிகப் பெரிய ஆயுதம் வாக்களிப்பது தான். அது ஜனநாயகக் கடமை மற்றும் பொறுப்பு. நான் வாக்களித்து விட்டேன். எனது ரசிகர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று ஓய்வு நாள் என்று நினைக்காமல், உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாக கருதுங்கள். மற்ற நாட்களை விட இன்றைய நாள் முக்கியமானது. நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர்,பேசியதாவது “நான் எப்போதும் காலையிலேயே வந்து வாக்களித்து விடுவேன். ஒரே ஒரு முறை மட்டும் படப்பிடிப்பு காரணமாக தாமதமானது. வாக்கு என்பது நாம் அனைவரும் சமமானவர்கள் என்பதற்கான அடையாளம். இங்கு ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லை. பணக்காரர்களுக்கு இரண்டு ஓட்டு, ஏழைகளுக்கு ஒரு ஓட்டு என்பதில்லை. எல்லோருக்கும் ஒரே ஒரு ஓட்டு தான். அதுவே நமது பலம்.

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள தேர்தல் இது என்பதால், இந்தத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய நான் ஆர்வமாக உள்ளேன்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள தேர்தல் இது என்பதால், இந்தத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.