இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

 
1 1

சூரிய கிரகணங்கள் மூன்று வகையாக உள்ளன. பகுதி சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம் மற்றும் நெருப்பு வளைய சூரிய கிரகணம். சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும்போது நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில், சந்திரன் சூரியனை விட சிறியதாகத் தோன்றும், எனவே சூரியனின் விளிம்புகள் பிரகாசமான வட்டமாகத் தோன்றும். இதைத்தான் நெருப்பு வளைய கிரகணம் என அழைக்கிறோம்.

2026ம் ஆண்டின் முதல் கிரகணம் இன்று பிப்ரவரி 17ம் தேதி நிகழ உள்ளது.இந்திய நேரப்படி, இன்று மதியம் 3:26 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம், இரவு 7:57 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2026 சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிகிறதா?
2026 சூரிய கிரகணம் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் தெரியாது.

Advertisement


 சூரிய கிரகணம் 2026 (Solar Eclipse 2026) எங்கு பார்க்கலாம்?
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) குறிப்பிடுகையில், "அண்டார்டிகாவில் ஒரு வளைய சூரிய கிரகணம் தெரியும், மேலும் அண்டார்டிகா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் ஒரு பகுதி கிரகணம் தெரியும்."

இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாமல் இருந்தாலும், இதைப் பார்க்கக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சூரியனை வெறும் கண்ணால் நேரடியாகப் பார்ப்பது பார்வைக்கு தீங்கு விளைவிக்கும். சிறப்பு கண்ணாடிகள் அல்லது தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். 


சூரிய கிரகணம் நேரலையில் பார்ப்பது எப்படி?

இன்று வானில் நடக்கப்போகும் இந்த அதிசய கிரகணத்தை மொபைலில் நேரடியாகப் பார்க்க விரும்பினால், Eclipsophile.com என்கிற இணையதளத்தில் காணலாம்.