இன்று பௌர்ணமி... இன்று இரவு இதை செய்ய மறக்காதீங்க..!

 
1 1

பௌர்ணமி இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு முக்கியமாக நமக்கு 5 பொருட்கள் தேவை. மிளகு, கருப்பு எள்ளு, பச்சரிசி, கிராம்பு, மஞ்சள் தூள் இந்த ஐந்து பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன வெள்ளைத் துணியில் இந்த ஐந்து பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமா வைத்து ஒரே முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் நிலவு வெளிச்சம் எந்த இடத்தில் பிரகாசமாக பூமியில் வந்து சேர்கிறதோ, அந்த இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். மொட்டை மாடி, பால்கனி, வீட்டிற்கு முன்பக்கம், பின்பக்கம், எந்த இடமாக இருந்தாலும் சரிதான். ஒரு சின்ன அகல் விளக்கில் கொஞ்சமாக கட்டி கற்பூரம் வைத்துக் கொள்ளுங்கள். அதை நெருப்புப் பொருத்தி விடுங்கள். அக்னி தேவனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வானில் பிரகாசமாக ஒளிரும் நிலவின் ரூபத்தில் குலசாமியையும் அம்மனையும் சந்திர பகவானையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

மொட்டை மாடி, பால்கனி, வீட்டிற்கு முன்பக்கம், பின்பக்கம், எந்த இடமாக இருந்தாலும் சரிதான். ஒரு சின்ன அகல் விளக்கில் கொஞ்சமாக கட்டி கற்பூரம் வைத்துக் கொள்ளுங்கள். அதை நெருப்புப் பொருத்தி விடுங்கள். அக்னி தேவனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வானில் பிரகாசமாக ஒளிரும் நிலவின் ரூபத்தில் குலசாமியையும் அம்மனையும் சந்திர பகவானையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

நெருப்பை சாட்சியாக வைத்துக்கொண்டு, தயார் செய்த முடிச்சை கையில் வைத்துக்கொண்டு என்னை பின் தொடரக்கூடிய கடன் சுமை, கிரகங்களால் ஏற்படும் பாதிப்பு, மன கஷ்டம், எதிர்மறை ஆற்றலால் ஏற்படும் பிரச்சனைகள், சுபகாரிய தடைகள், அனைத்தும் விலக வேண்டும் என்று மனம் உருகி வேண்டி கையில் இருக்கும் முடிச்சை அந்த நெருப்பில் போட்டு விட வேண்டும். அந்த முடிச்சும், முடிச்சில் இருக்கும் பொருட்களும், நெருப்போடு எரிந்து முடியும் வரை, முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து, வெளியிலேயே அமர்ந்து பிரார்த்தனை செய்தால், நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்ட வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும். உங்களை விட்டு மிகப்பெரிய இந்த ஐந்து விதமான பிரச்சனைகளும் விலகிவிடும்.

மிளகு கடன் சுமையை குறைப்பது, கருப்பு எள்ளு சனி பகவானால் வரும் தாக்கத்தை குறைக்கும், பச்சரிசி மன அழுத்தத்தை குழப்பத்தை போக்கும், கிராம்பு நம்மிடம் கெட்ட சக்தியை நெருங்க விடாமல் பாதுகாக்கும். மஞ்சள் தூள், குரு பகவானுக்கு உரியது. சுபகாரி தடைகளை நீக்கும் நீக்கும். இந்த ஐந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த ஐந்து விதமான பொருட்களை பயன்படுத்தி இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.