இன்று முதல் 14ஆம் தேதி வரை வறண்ட வானிலை!!

 
rain rain

இன்று முதல் 14ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய,  தென்மேற்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

16ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.