இன்று மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

 
தங்கம் விலை


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 43,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச வர்த்தகத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தொடர்ந்து ஏற்ற இறங்களுடனேயே தங்கம் விற்பனையாகி வருகிறது.  சென்னையை பொறுத்தவரை கடந்த வாரங்களில் தொடர் சரிவில் இருந்துவந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் தொங்கியிருக்கிறது. கடந்த ஜூன் 1ம் தேதி தங்கம் விலை ரூ.46,000ஐ தொட்டது. பின்னர் ஒருநாள் உயர்வதும், ஒருநாள் குறைவதுமாக இருந்து வந்தது. அந்தவகையில் கடந்த இரு வாரங்களில் கனிசமாக குறைந்து தற்போது சவரன் ரூ.44 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகிறது.

தங்கம் விலை

இந்நிலையில் நேற்று முதல் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதாவது நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.136 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.43,616க்கும், கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,452க்கும் விற்கப்பட்டது.  இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமு 64 ரூபாய் உயர்ந்து  ஒரு சவரன்  ரூ.43,680க்கும், கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,460க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.75.80 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 75,800க்கு விற்கப்படுகிறது.