அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..

 
தங்கம்

தொடர்ந்து  ஏறுமுகத்தில்  இருந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 500 குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை  சொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.  ஒரு நாள் 10 , 20 என தங்கம்  விலை குறைந்தாலும், அடுத்த நாட்களில் ரூ 100, ரூ 200 என பெரிய அளவில் விலை அதிகரித்து விடுகிறது. இதனால் தங்கம்  வாங்க எண்ணி திட்டமிட்டிருந்தவர்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர். இந்நிலையில் இன்றைய தினம் தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு லாபம் தான்.. இன்று சென்னையில்  தங்கம் விலை அதிரடியாக  ரூ 500 குறைந்திடுக்கிறது. அதேபோல் நேற்று கிராமுக்கு 4 ரூபாய் வரை அதிகரித்த வெள்ளி விலையும் குறைந்திருக்கிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.

 சென்னையில் நேற்று  ஒரு கிராம் தங்கம்  4,367 ரூபாயாக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ,37,096 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  கிராமுக்கு  63 ரூபாய் குறைந்து   ரூ.4,574 க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 504 குறைந்து  ரூ. 36,592 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.68.50 ஆக இருந்தது. இன்று 80 பைசா குறைந்து ரூ.67.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது. . ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.