அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

 
இரண்டாம் நாளாக தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று..  திருமணம், சீர்வரிசை, உறவினர்களுக்கு அன்பளிப்பு என  பல்வேறு காரணங்களுக்காக தங்கம் வாங்குவது வாடிக்கையாகி இருக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை  தங்க நகைகள் பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. சிறந்த சேமிப்பு, முதலீடு, லாபம் என தங்கம் அனைத்திலும் முன்னணி வகிப்பதால், அதனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

அதிலும் பிற வர்த்தக நகரங்களை விட, தங்க வியாபாரத்தில் சென்னை முன்னிலை வகிக்கிறது.  இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது.  நேற்று,  ஒரு கிராம் ரூ.4,605 க்கும்,  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 36,840 க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை

இந்நிலையில் இன்று  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு  32  ரூபாய் அதிகரித்து ரூ.4,637 க்கும்,  ஒரு சவரன்  ரூ.37,096 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல்  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் நேற்று ரூ.64.10 க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி, இன்று அதிரடியாக விலை உயர்ந்திருக்கிறது. அதன்படி, கிராமுக்கு 4 ரூபாய் 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம்  ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ. 68,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.