ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம்.?? NHAI-ன்புதிய விதியால் அதிர்ச்சி..
இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டில் மொத்தம் 1057 சுங்கச்சாவடிகள் உள்ளன.
ஏற்கனவே சாலை வரி, சேவி வரி என பல கட்டணங்களை செலுத்து வரும் மக்களுக்கு சுங்கக்கட்டணமே சுமையாக இருந்து வருகிறது. அத்துடன் சுங்கச்சாவடிகளில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய சூழலும் இருந்து வந்தது. இதனை எளிமைபடுத்தும் முயற்சியாக ஃபாஸ்டேக் என்னும் டிஜிட்டல் பேமண்ட் முறையை நெடுஞ்சாலை ஆணையம் கொண்டு வந்தது.

அதேநேரம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு கூடுதல் சுமையையும் அளித்தது. தற்போது வரை கார்கள், வேன், பேருந்து, கனரக வாகனங்களுக்கு சுங்கக்கட்டனம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் தான் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்து வந்தது. இருசக்கர வாகனத்தை புதிதாக் வாங்கும்போது சுங்கவரி வசூலிக்கப்படும். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி வழியே பயணிக்கும்போது சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 15 முதல் இந்த விதி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதியின்படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் FASTag மூலம் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், விதியை மீறுபவர்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. NHAIன் புதிய விதியால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகும் சூழல் ஏற்படும். முன்னதாக ஜூலை 15ம் தேதி முதல் ரூ.3000 செலுத்தி வருடாந்திர சுங்கக்கட்டண பாஸ் திட்டம் நடைமுறைக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


