தக்காளி விலை உயர்வு - அமைச்சர் பெரியகருப்பன் மாலை ஆலோசனை

 
periyakaruppan

தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

tomato

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோயம்பேடு  சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 150 ரூபாயை எட்டிய நிலையில் சில்லறை விற்பனையில் 180 ரூபாயாக இருந்தது.  இன்று தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ. 20 ரூபாய் உயர்ந்து,  ஒரு கிலோ தக்காளி விலை 180 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை 200 ஆக உயர்த்துள்ளது.

tomato

தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தற்காலிகளை வரிசையில் நின்று வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.

tomato

இந்நிலையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார் . தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.தக்காளிக்கு விலை நிர்ணயிப்பது, தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.