நாளை தான் கடைசி நாள்..! உடனே விண்ணப்பீங்க..! வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் கிளார்க் வேலை..!

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் இதற்கான தேர்வுகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.
கிளார்க் - எழுத்தர்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6128
ஊதியம்: ரூ.28,000/
கல்வி தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிந்தால் போதுமானது.
காலியிடங்கள் உள்ள வங்கிகள்:
- பேங்க் ஆஃப் பரோடா,
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
- பாங்க் ஆஃப் இந்தியா,
- பஞ்சாப் நேஷனல் வங்கி,
- பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா,
- பஞ்சாப் சிந்து வங்கி,
- கனரா வங்கி,
- யூகோ வங்கி,
- சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,
- யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா,
- இந்தியன் வங்கி
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு போன்ற நிலைகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/crpcl14jun24/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்: ST/SC/ PWD/ ESM/ DESM – ரூ.175/-
மற்றவர்களுக்கு – ரூ.850/-
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2024