நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

 
vijay vijay

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார்.  இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.


இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். த.வெ.க மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள் நாளை இறுதிச் செய்யப்படவுள்ளனர். வாக்கெடுப்பு முறையில் த.வெ.க மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.  100 மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.