பல்லை பிடுங்கிய விவகாரம்- பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சம்மன்

 
teeth

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு ஆஜரான பற்களை போலீசார் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பல்லை பிடுங்குவதா?? நெல்லை காவல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்..

அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவர் ஜல்லிக்கற்களைக் கொண்டு விசாரணைக் கைதிகளைக் குரூரமாகத் தாக்கி, அவர்கள் பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பற்களை உடைத்து, வாயில் ஜல்லிக் கல்லைத் திணித்து முகத்தில் கடுமையாகத் தாக்கியதாகவும் 8 இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புதிதாக திருமணமான இளைஞர் ஒருவரின் அந்தரங்க உறுப்பையும் குரூரமாகத் தாக்கியதில் அவர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. தாக்கப்பட்டவர்கள்  அதற்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர். 


இந்நிலையில் சேரன்மகாதேவி சார ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மூன்று நபர்களான, லெட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ் ஆகிய 3 நபர்கள்  நேரில ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் உடன் நேரில் ஆஜராகி சார் ஆட்சியரிடம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி வாய் திறந்தால் மேலும் வழக்குகள் வரலாம் என போலீசார் பல்வேறு வழிகளில் மிரட்டிவருவதாகவும் சிலநபர்களை இன்னும் போலீஸ்  பிடியில் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிவருகிறது