கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

 
tn

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

tn
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து வருகிறது. இதனால் அருவியில் நீர்வரத்து எப்போதும் காணப்படும் என்பதால் அப்பகுதி வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைவர்.  இந்த சூழலில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

தேனியில் கனமழை.. கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் வெள்ளகவி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில்,  கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணி கள் கும்பக்கரை அருவியில் குளிக்க  வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் தடை விதித்துள்ளார்.