விடுமுறை நாளில் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

 
குற்றாலம்

குற்றால அருவிகளில் குளிக்க ஒதுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து விடுமுறை தினமான இன்று அருவிகளில் குளிக்க  ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

 வழக்கமாக ஜூன் மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும்.  அப்போது தொடங்கும் குற்றால சீசன் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும்.  ஆனால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த வாரத்தில் தான் சீசன் தொடங்கியது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் செய்த தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவ்வபோது குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகல் ஏமாற்றமடைந்தனர்.

கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு!

இந்நிலையில்  நேற்று அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து, குளிப்பதற்கு ஏற்ற அளவில்  நீர்வரத்து இருந்ததால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் விடுமுறை தினமான இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புவியருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.  சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால் தென்காசி மாவட்டத்தின் பிரதான சாலைகள் மற்றும் குற்றால அருவி கரை பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.  சுற்றுலா பயணிகளின் வருகையால் வியாபாரிகளுக்கு விற்பனையும் களைகட்டியுள்ளது.