நிலகிரிக்கு குடியரசுத் தலைவர் வருகை - விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை

 
tn

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு குடியரசுத் தலைவர்  வருகையையொட்டி நாளை வரை அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்கக்கூடாது என போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை நீலகிரிக்கு வருகை புரிகிறார்.  தெப்பக்காடு முகாமை பார்வையிட்டு அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து பேசும் அவர் , ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன்  -பெள்ளி தம்பதியினரை  நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

draupadi murmu

இதன் காரணமாக தெப்பக்காடு பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  கடும் சோதனைக்கு பிறகே  தெப்பக்காடு வரும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் மூலம் வருகைபுரிய  இருப்பதால் மசினகுடியில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான முன்னோட்டங்கள் நடைபெற்றுள்ளது. அத்துடன் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்தந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  முதுமலை புலிகள் காப்பகம் ஐந்து அடுக்கு உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ட்ரோன்கள் பறக்க வனத்துறை தடை விதித்துள்ளது.


Draupadi Murmu 1

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு வருகை தரவுள்ளார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேடு, தெப்பக்காடு யானைகள் முகாம்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது; பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை வரை அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்கக்கூடாது என விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.