வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்!!

 
Marina

வார இறுதி  நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சனி ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் இடையூறு  ஏற்படாத வகையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து துறை காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

marina

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்றும் கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு , பாரதி சாலை -பெல்ஸ் ரோடு -வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பாரதி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

traffic

அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. (பெல்ஸ் சாலை ஓரு வழிப்பாதையாக மாற்றப்படும்)

நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை - பெல்ஸ் ரோடு - வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஓருவழிப்பாதையாக மாற்றப்படும்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.