இறுதி ஊர்வலம் முடியும் வரை ஈவெரா சாலையில் போக்குவரத்துக்கு தடை

 
விஜயகாந்த்

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ஈவெரா சாலை வழியாக நடைபெறும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Image

 

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில்  வைக்கப்பட்டுள்ளது. மதியம் 2.30 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணி அளவில் 72 துப்பாகி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து ஈவெரா சாலை வழியாக கோயம்பேடு கொண்டு செல்லப்படுவதால், அந்தப் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை, இறுதி ஊர்வலம் முடியும் வரை பொதுமக்கள் அந்த வழியை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் சென்னை தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, 100 அடி சாலையில் சரக்கு வாகனங்கள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், வெளியூரில் இருந்து வருவோரின் வாகனங்களை மெரினா கடற்கரை, பல்லவன் சாலையில் நிறுத்தி கொள்ளலாம் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.