பல்லாவரத்தில் ஸ்தம்பித்த போக்குவரத்து.. கல்லூரி பேருந்தால் வாகன ஓட்டிகள் தவிப்பு..!!

 
பல்லாவரத்தில் ஸ்தம்பித்த போக்குவரத்து.. கல்லூரி பேருந்தால்  வாகன ஓட்டிகள் தவிப்பு..!! பல்லாவரத்தில் ஸ்தம்பித்த போக்குவரத்து.. கல்லூரி பேருந்தால்  வாகன ஓட்டிகள் தவிப்பு..!!


பல்லாவரம் மேம்பாலம் இறக்கத்தில் கல்லூரி பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து இரும்பு தடுப்புகள் மீது மோதிய விபத்துக்குள்ளானதில்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
 
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி இன்று காலை தனியார் கல்லூரி பேருந்து வந்தபோது , திடீரென இருசக்கர் வாகனம் குறுக்கே வந்ததால் கட்டுபாட்டை இழந்த பேருந்து மேம்பால இறக்கத்தில் இருந்த  இரும்பு தடுப்புகள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.  இதனால் மேம்பாலத்தில் இருபுறத்தில் வந்த வாகனங்களும், குரோம்பேட்டை, பாண்ட்ஸ் மேம்பாலம், பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலை என 3 கிலோமீட்டர் தூரத்திற்கு  ஆங்காங்கே நிறுத்தப்பட்டன . சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் நெரிசல் ஏற்பட்டது, 

Chennai Traffic

போக்குவரத்து போலீசார் பேருந்தை அப்புறப்படுத்திய நிலையில் பல்லாவரம் இருவழிப்பாதையை தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றி,  பல்லாவரத்தில் இருந்து சென்னை விமான நிலையம் செல்லும் விதமாக மாற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.  ஒருமணி நேரம் கழித்து மீண்டும் பல்லாவரம் மேம்பாலத்தில் இருவழியிலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.