நாயால் பறிபோன உயிர்! மணப்பாறை அருகே சோகம்

 
Death Death

மணப்பாறை அருகே நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

dog

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பூசாரி குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 68). எலக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வரும் இவர் இன்று காலை வழக்கம்போல், தனது இருசக்கர வாகனத்தில் மணப்பாறையில் உள்ள தனது கடைக்கு சென்று கொண்டிருந்தார். சரளப்பட்டி என்ற இடத்தில் செல்லும் போது, எதிர்பாராத விதமாக நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.