ரயில் தீ விபத்து: ரயில் நிலையங்களில் இருந்து 211 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

 
 ரயில் தீ விபத்து: ரயில் நிலையங்களில் இருந்து 211 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..   ரயில் தீ விபத்து: ரயில் நிலையங்களில் இருந்து 211 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. 

திருவள்ளூர் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, 211 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  

Image

சென்னை மணலில் உள்ள ஐ.ஓ.சி.எல் பகுதியில் இருந்து 52 டேங்கர்கள் மூலம்  டீசல் நிரப்பப்பட்டு  இன்று அதிகாலை
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் , திருவள்ளூர் ஏகாட்டூர் இடையே இன்று அதிகாலை 5:30  மணியளவில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 18 டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்தது. இதில் 12 கோடி மதிப்பிலான 12 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் டீசல்  எரிந்து முழுமையாக நாசமானது. இதனால் அரக்கோணம் - சென்னை மாரக்கமாக அனைத்து மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டன. 10க்கும் மேற்பட்ட பயணிகள் விரைவு ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. 10க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.  இதன்காரணமாக பயணிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர்.  

Image

இந்நிலையில் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளதாவது, “திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால்  பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பாக காட்பாடி, குடியாத்தம், அரக்கோணம், திருவள்ளூர், மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து நண்பகல் 02:00 மணி நிலவரப்படி 211 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, பயணிகள் வசதிக்காக திருவள்ளூர் பேருந்து நிலையம் - ஆவடி மற்றும் திருவள்ளூர் பேருந்து நிலையம் - பூந்தமல்லி இடையே பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக தற்போது வரை தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.