தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து சீரானது

 
தாம்பரம் தாம்பரம்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து சீரானது.

train

தாம்பரம் ரயில் நிலையத்தில்  மேம்பாட்டு பணிகள் மற்றும் தாம்பரம் யார்டு  ரயில்வே ஸ்டேஷனின் 2ம் கட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதன்காரணமாக மின்சார ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டன. அதேபோல்  29 விரைவு ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி நிறைவடைந்து மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியது. தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல நின்று செல்லும் என்றும் அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சீராகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்ததால் தற்போதே ரயில் போக்குவரத்து தொடங்கியது. இன்று ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.