அரசு ஊழியர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி - அரசாணை வெளியீடு!!

 
govt

அரசு பணியில் புதிதாக சேரும் பணியாளர்களுக்கு அவரவர் அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

stalin

புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் திட்டம் கொண்டுவரப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன்   பதவி உயர்வு பெறும் அரசு பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பயிற்சி தரப்படும்,  அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மையத்தில் இருந்து அதிகாரிகள் சென்று பயிற்சி வழங்க உத்தரவிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

stalin


இந்நிலையில் அரசு பணியில் புதிதாக சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்ற திட்டத்தின் அரசாணை  தமிழ்நாடு மனிதவள மேலாண்மையினால் வெளியிடப்பட்டுள்ளது . தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிக்கான பருவம்  முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.