3 ஆண்டுகளாக கதறியும் நடவடிக்கை இல்லை! மேம்பாலத்தில் இருந்து குதிக்க சென்ற திருநங்கை... காப்பாற்றிய செய்தியாளர்கள்

 
அ அ

தாமிரபரணியில் நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கையை காப்பாற்றிய ஒளிப்பதிவாளர், செய்தியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.


நெல்லை நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேலான திருநங்கைகள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மூன்றாண்டுகளுக்கு மேலாக கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்படாத திருநங்கைகள் நெல்லை ஜங்ஷன் செல்லும் சாலைக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஒரு திருநங்கை திடீரென அங்கிருந்து எழுந்து தாமிரபரணி பாலத்தை நோக்கி ஓடிவந்து அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். 



இதை செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்றிருந்த தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர்கள், செய்தியாளர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கையை தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய வருகிறது பலரும் திருநங்கையை காப்பாற்றிய ஒளிப்பதிவாளர்கள், செய்தியாளர்களை பாராட்டி வருகின்றனர்.  ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கொடுக்கப்பட்ட மனுவில் வரிசை எண் எதுவுமே இல்லை, பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.