போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக வழக்கு - இன்று மதியம் விசாரணை

 
high court

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. 

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

BUS

இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு முன்பு வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் இது தொடர்பாக முறையிட்டுள்ளார். அதில், பொங்கல் பண்டிகை காலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.