வரும் 27, 28ல் இந்திய உலக கல்வி மாநாடு- டிஆர்பி ராஜா
இந்திய உலக கல்வி மாநாடு வரும் 27 மற்றும் 28ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாக தொழில்துறை டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சென்னைக்கு மிக அருகில் ஒரு அறிவுசார் நகரம் அமைக்கப்பட்டுவருதாகவும், இதில் உலகின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமைய வேண்டும் என்று தான் முதல்வரின் விருப்பம் என்று தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக இந்திய உலக கல்வி மாநாடு வரும் 27 மற்றும் 28ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாகவும், இதில், 20 வெளிநாடுகளில் இருந்து உயர்தர கல்வியை வழங்கி கொண்டுள்ள பல்கலை கழகங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆயிரம் பிரநிதிகள் கலந்து கொள்ள உள்ள இந்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளி நாட்டு கல்வி நிறுவனங்களுடன் பேசி அவர்களின் நிறுவனங்கள் அறிவுசார் நகரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


