"நடவடிக்கையே இல்லை... தலைமை செயலர் தலையிட வேண்டும்" - பசுமை தீர்ப்பாயம் அதிரடி!

 
இறையன்பு

வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் பகுதிகளில் புதிதாக உயரமான கட்டடங்கள் கட்டப்படுவதால், ஏரிக்கு ஆபத்து ஏற்படும் என்றும், வேளச்சேரி ஏரி மற்றும் வீராங்கால் ஓடையில் கழிவுநீரை சேர்ப்பதால் ஏரி மாசுபடுவதாகவும் கடந்த ஆண்டு நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. அவற்றின் அடிப்படையில் இரு வழக்குகளை பதிவு செய்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். மேலும் வேளச்சேரி ஏரி, அதன் வரத்து கால்வாயில் உள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கூட்டுக் குழுவும் அமைக்க உத்தரவிட்டது.

தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்! | nakkheeran

ஏரியை பராமரிக்கும் பொதுப்பணித் துறை, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய மாவட்ட ஆட்சியர், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டிய சென்னை குடிநீர் வாரியம் ஆகியவை  ஆகியவை மந்தமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, வேளச்சேரி ஏரியை மாசுபடுவதைத் தடுப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்களை உருவாக்கி, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு|அதிகாரிகள் அலட்சியம்

இந்த வழக்கு இரு வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், "வேளச்சேரி ஏரி மாசுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை ஒருவரும் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த விவகாரத்தில் தலைமைச் செயலர் தலையிட்டு, ஒருங்கிணைந்த விரிவான செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.