திருச்சியில் நகைக்கடைகளில் சோதனை!!

 
TN

திருச்சியில் 4 நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

surana raid

திருச்சி தங்க, வைர நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் திருச்சி ஜாபர்ஷா தெரு, பெரியகடை வீதியில் உள்ள 4 கடைகளில் சோதனை நடந்து வருகிறது.  சக்ரா, ரூபி, விக்னேஷ், சூர்யா நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்து வருகின்றனர். 

RAID TTN
10க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் 6 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை  செய்கின்றனர். ஏற்கனவே, சென்னையிலும் நேற்று முதல் நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சவுகார்பேட்டை பகுதியில் 2வது நாளாக நகைக்கடைகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.