திருச்சி சூர்யாவுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்..!

 
1

சமீபத்திய ஒரு பேட்டியில் யூடியூப்பர் முக்தாருடன் இணைந்து பங்கேற்றிருந்தார் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இந்த யூடியூப் நேர்காணலில் பா.ஜ.க. பெண் நிர்வாகி மற்றும் அவரது குழந்தைக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பேசியுள்ளார். இது குறித்து அந்த பெண் நிர்வாகி அளித்த அடிப்படையில், சைபர் க்ரைம் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதே வழக்கு தொடர்பாக யூடியூபர் முக்தார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டதிருச்சி சூர்யா சிவாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைபர் க்ரைம் போலீஸார் சைதாப்பேட்டையில் உள்ள 11-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி வழங்கினார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, திருச்சி சூர்யா சிவாவை மத்திய குற்றப்பிரிவின் (CCB) சைபர் க்ரைம் பிரிவுக்கு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் சனிக்கிழமை (ஜூன் 13) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,