அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு 24 மணிநேரம் கெடு வைத்த நடிகை த்ரிஷா

 
tn

தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ-க்கு எதிராக த்ரிஷா சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

trisha
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி மிகவும் சர்ச்சைக்கு உள்ளானதாக மாறி உள்ளது.  கூவத்தூர் விவகாரம் குறித்து பேசிய அவர்,  அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் என்ன கூத்து அடித்தார். என்ன செய்தார்? .அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் .என்றெல்லாம் தெரியும். அந்த சின்ன வயசு  நடிகை வேண்டும் என்று வெங்கடாசலம் கேட்டுக்கொண்டார்.  நடிகை த்ரிஷாவை அவர் கேட்டார். அவர்தான் வேண்டும் என்று அடம் பிடித்தார். நான் கூவத்தூரில் இவரை பார்க்க போனேன். அங்கே என்ன எல்லாம் நடக்கிறது என்று பார்க்கப் போனேன். அப்புறம் அங்கு கருணாஸ் அங்கு இருந்தார்.  அவர் தான் ஏற்பாடு செய்தார்.

TN

பாவம் அந்த பிரபல நடிகைக்கு 25 லட்சம் கொடுத்து அழைத்து வந்தார்கள். எல்லா நடிகையையும் ஏற்பாடு செய்தது கருணாஸ் தான். எல்லா நடிகையும் இருந்தாங்க. அவரவர் கேட்டதை பூர்த்தி செய்தார்கள். யார் என்ன வேண்டும் என்று கேட்டார்களா அதை கொடுத்தனர். கணக்கு வழக்கு எல்லாம் இல்லை இதற்கெல்லாம் காசு கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் மட்டுமின்றி திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்தில் ஏ.வி.ராஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். மேலும் தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்”  என்று எச்சரித்துள்ளார்.