சமயபுரம் மாரியம்மன் கோயிலில் லாரி மோதி விபத்து- பக்தர்கள் அதிர்ச்சி

 
சஃப் சஃப்

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் நுழைவு வளைவு தூண், லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 2 மணியளவில் நுழைவாயில் மீது லாரி மோதியதில் தூண்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் தூண் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்துள்ளது. உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைப்படி நுழைவாயிலின் மேற்பகுதியில் இருந்த 3 சாமி சிலைகளை பத்திரமாக அப்புறப்படுத்திவிட்டு, கிரேன் உதவியுடன் மற்ற கடைகளுக்கு சேதாரம் ஏற்படாத வகையில் நுழைவு வாயில் தகர்க்கப்பட்டது. 3 சாமி சிலைகளும் கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதன் காரணமாக இந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ள போலீசார் வாகனங்கள், பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் சேதமடைந்த நுழைவாயிலின் தூணை பார்வையிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.