டிரம்ப் போட்ட வரி...! அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு..!
Aug 13, 2025, 06:15 IST1755045943000
அமெரிக்காவில் காபியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அதிக அளவில் காபியை ஏற்றுமதி செய்யும் பிரேசிலுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள காபி பிரியர்களுக்கு ஒரு கசப்பான அனுபவத்தைத் தரக்கூடும்.
கடந்த ஆண்டை காட்டிலும், இந்த மே மாதம் காபியின் விலை ஏற்கனவே 11% உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் காரணமாக காபி உற்பத்தி பாதிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். இப்போது டிரம்ப் விதித்துள்ள வரி, காபியின் விலையை மீண்டும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது, அமெரிக்க மக்களின் தினசரி செலவில் சுமார் 2400 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


