"ஒரு அணியில் சேர தான் வாய்ப்பு இருக்கே தவிர ஒன்று சேர வாய்ப்பில்ல" - டிடிவி தினகரன்

 
ttv ttv

முருக பக்தர்கள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் குறித்த பட காட்சிகளை தவிர்த்து இருக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Image


சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பான அண்ணா, பெரியார் குறித்த விமர்சனம் வருத்தமளிக்கிறது. மேடை நாகரீகம் கருதி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அங்கு அமைதியாக இருந்து விட்டு வெளியே வந்து கண்டனம் தெரிவித்துள்ளனர் . முருக பக்தர்கள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் குறித்த பட காட்சிகளை தவிர்த்து இருக்க வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. மறுநாளே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கண்டனத்தை தெரிவித்துவிட்டார். பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் வருத்தம் அளிக்கிறது. அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் அண்ணாவின் வழி வந்தவர்கள். திராவிட கட்சிகளின் கொள்கை தலைவர்களை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. படக்காட்சியை ஒளிபரப்பியது கண்டனத்திற்குரியது. எல்லோரையும் அழைத்துவிட்டு காணொளியை காண்பித்தது கண்டனத்திற்குரியது. யார் தலைவராக இருந்தாலும் அமமுக என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும். அதிமுக ஒரு அணியில் சேர தான் வாய்ப்பு இருக்கே தவிர ஒன்று சேர வாய்ப்பில்லை.

Image

போதைப்பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் பட்டித் தொட்டி எங்கும் பரவி கிடைக்கிறது. திமுக ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் நடந்த ஆட்சிகளில் மிக மோசமான ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. உறுதியாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு படுதோல்வியை தருவார்கள்” என்றார்.