“அமித்ஷாவின் முயற்சிக்கு எந்த பங்கமும் வராது, திமுகவை வீழ்த்த வேண்டும்”- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran ttv dhinakaran

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அமமுக மாவட்டச் செயலாளர் கார்த்திக் பிரபாகரன் இல்ல விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

ttv

அப்போது பேசிய டிடிவி தினகரன், “ ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுகவை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரள வேண்டும் என்கின்ற ஒரே குடையின் கீழ்  அணி திரள வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ளார். அதேபோன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். அமித்ஷாவின் முயற்சிக்கு எந்த பங்கமும் வராத அளவிற்கு எல்லாம் நடக்கும் என்று நான் நம்புகிறேன். இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. 

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்லி அதிமுக கட்சி ஆட்சி அமைக்கும் என்று அன்றைக்கு சொன்னதை தான் திரும்பவும் சொல்லியுள்ளார் அமித்ஷா. அவருடைய பெரும் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த நாங்கள் எந்த ஒரு கருத்தும் சொல்வது நாகரீகமாக இருக்காது. அமித்ஷாவின் எண்ணம் திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்காக அவர் உருவாக்கி இருக்கின்ற கூட்டணி சிறப்பாக தொடர்ந்து செல்ல வேண்டும். இன்னும் பல கட்சிகள் எந்த கட்சிகள் எல்லாம் திமுகவுக்கு எதிராக திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறதோ அந்த கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வந்து எங்கள் கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்தைத்தான் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். கூட்டணி ஆட்சி குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறுகிறார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே இலக்கோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கின்றோம். அமித்ஷாவின் பெருமுயற்சியால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கின்றோம். அவர்களது பெரு முயற்சிக்கு எந்த ஒரு பங்கமும் வராத வண்ணம் கூட்டணி கட்சியாக அமமுக போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகிறோம். அதனால் முன்னாள் அமைச்சர்கள் பேசிய கருத்துக்கள் எல்லாம் நான் பதில் சொல்லி இன்னும் நான் அதை பெரிதாக்க விரும்பவில்லை. அவர் அவர்கள் கருத்து அவரவர்கள் சொல்லியுள்ளார்கள். அவர்களது கட்சித் தலைமை இதைப் பற்றி கூறும் போது தெளிவு கிடைக்கும். 

ttv

2026 மட்டுமல்ல 2031, 36லும் திமுக ஆட்சி அமைக்கும் என்று சொல்வது தமிழ்நாடு முதலமைச்சர் கனவு. நிச்சயம் வரப்போவதில்லை என்று அறிந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் இன்று சட்ட ஒழுங்காக இருக்கட்டும் பெண்களின் பாதுகாப்பு, போதை மருந்து கலாச்சாரம், விலைவாசி உயர்வு உள்ளது. அதே நேரத்தில் திமுக சொன்ன வாக்குறுதிகளை யாருக்கும் நிறை வேற்றாமல் விவசாயிகள் முதல் மாற்றுத் திறனாளிகள் வரை அனைவரும் வீதிக்கு வந்து போராடுகின்ற நிலைமையில் இந்த ஆட்சி கூட்டணி பலத்தை நம்பிக்கொண்டு பேசுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கும். அமமுக எட்டாம் ஆண்டு காலமாக தனி கட்சியாக செயல்பட்டு வருகிறது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்து வருகிறோம். மற்றவர்களைப் பற்றி பேசினால் நாகரிகமாக இருக்காது இதைத்தான் நான் சொல்ல முடியும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் வருமா என்பதை பற்றி எல்லாம் பாஜகவினரோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தலைவர்களோ சொன்னால்தான் நன்றாக இருக்கும். அதிமுக வெற்றி பெறாததற்கு காரணம் என்ன என்பதை அக்கட்சியில் உள்ளவர்கள் சுய பரிசோதனை செய்து சரி செய்வார்கள். தற்போது திமுகவில் வீழ்த்த வேண்டும் என்று கட்டாயம் அனைவருக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நல்லாட்சியை விரும்புகிறார்கள், அதை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கும் இருக்கிறது. இது அனைத்துமே சரியாகிவிடும் என்று நான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்கின்றேன்” என்றார்.