இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்த அவலநிலை தொடருமோ? தினகரனின் வேதனை பதிவு!!

 
ttv

 கழிவு நீர் தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததற்கு தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 
tn

மதுரை மாநகராட்சி 70 ஆவது வார்டு நேதாஜி ரோடு நேரு நகரில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் தொட்ட யில் கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் பணியில் லட்சுமணன், சிவகுமார், சரவணன் ஆகிய மூன்று ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதில் 3 பேரும் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து விஷ வாயுவால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதையடுத்து சடலமாக மீட்கப்பட்ட மூவரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் ,லோகநாதன், உரிமையாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மாநகராட்சியின் கழிவு நீர் வெளியேற்றும் தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் இந்தத் தொட்டிக்குள் இறக்கிவிடப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்த அவலநிலை தொடருமோ? 'கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்' என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது; விஞ்ஞானத்தின் துணைகொண்டு அதனை உடனடியாக செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை" என்று குறிப்பிட்டுள்ளார்.