"மக்களைக் காவு வாங்கும் சென்னை கால்வாய் பணிகள்" - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!!

 
ttv dhinakaran

மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

சென்னை போரூர் மங்கலம் 5வது தெருவை சேர்ந்த கபிலன் என்பவரின் மனைவி வாணி.  கேகே நகரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.  இவர் நேற்று தனது காரில் லட்சுமணசாமி  சாலையிலிருந்து பி.டி. ராஜன் சாலை வழியே சென்றபோது ,சாலையை ஒட்டி இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.  எதிர்பாராதவிதமாக மரம் காரின் மீது விழுந்ததில் கார் காரில் இருந்த வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அவருடன் பயணித்த அவரது தங்கை மற்றும் கார் ஓட்டுனர் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை மாநகரின் பல இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாமல் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  கே.கே நகரில் நேற்று மரம் விழுந்து வங்கி பெண் மேலாளர் திருமதி.வாணி பலியானதற்கு கால்வாய் தோண்டப்படும் பணிகளில் காட்டப்பட்ட அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

tn

இதற்கேற்றார்போல் பல பகுதிகளில் கால்வாய் தோண்டப்படும் இடங்கள் எவ்வித தடுப்புமின்றி திறந்தே கிடப்பதை பார்க்கமுடிகின்றது. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது. இதன்பிறகாவது உரிய முன்னெச்சரிக்கையோடும்,  பாதுகாப்போடும் இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.